சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.60,880க்கு விற்பனை!

11 hours ago 1

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.60,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டது. அக்டோபர் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையானது. இது வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலை இந்த மாதமும் நீடித்து வருகிறது. கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ.200, 15ம் தேதி சவரனுக்கு ரூ.80, 16ம் தேதி சவரனுக்கு ரூ.400, 17-ம் தேதி சவரனுக்கு ரூ.480 என உயர்ந்து சவரன் ரூ.59,600க்கும் விற்பனையானது.

வார இறுதிநாளான 18-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,435க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.59,480க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று (30.01.2025) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.60,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,610க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.60,880க்கு விற்பனை! appeared first on Dinakaran.

Read Entire Article