சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தநிலையில் கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 25ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 26ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.64,400 ஆகவும், 27ம் தேதி பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.64,080க்கும் விற்கப்பட்டது.
இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி வந்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.105க்கு விற்பனையானது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை appeared first on Dinakaran.