சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது

1 month ago 6

சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழக்கை பதிக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அம்மா உணவகங்களில் விலையில்லாத உணவு 3 வேலைகளிலும் கொடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் உணவி தேவை இருப்பவர்கள் அருகில் உள்ள அம்மா உணவகங்களுக்கு சென்றால் விலையில்லா உணவு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் சென்னையில் இருக்க கூடிய 400 அம்மா உணவகங்களில் காலை, மதியம், இரவு என 3 வேலையும் விலை இல்லா உணவு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் நேற்றையதினம் மட்டுமே சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சுமார் 1.08 லட்சம் பேருக்கு விலையில்லாமல் உணவுகள் வழங்கப்பட்டதாக அம்மா உணவகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் இட்லி, பொங்கல் போன்ற சிற்றுண்டியும், மதியம் சாம்பார் சாதம், தயிற் சாதம் போன்ற உணவுகளும் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறாக நேற்று காலை மற்றும் மதிய வேலைகளில் 78,557 பேர் உணவருந்தியுள்ளனர். நேற்று இரவு சப்பாத்தி மற்றும் சாம்பார் சாதம் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டது. இதம் மூலம் 29,316 பேர் பயனடைந்துள்ளனர்.

The post சென்னையில் அம்மா உணவகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article