சென்னையில் அதிகாலை முதல் மிதமான மழை

6 months ago 41

சென்னை,

கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13-ந்தேதி வரை ஒரு சில இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது . கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஆலந்தூர், மீனம்பாக்கம், சைதாப்பேட்டை ,கோயம்பேடு, அடையாறு, தரமணி, மந்தைவெளி, வேளச்சேரி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது .

Read Entire Article