சென்னையில் 5 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

1 day ago 1

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் & கேரட் தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான், தங்கம் 999 சதவிகிதம், 916 சதவிகிதம், 85 சதவிகிதம், 80 சதவிகிதம், 75 சதவிகிதம் தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள், மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும்.

மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை. அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். மேலும் விவரகளுக்கு 9566849767, 9842111561, 9080609808, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article