சென்னையில் 408 தாழ்தள பஸ்கள் இயக்கப்படுகின்றன-மாநகர போக்குவரத்துக் கழகம்

2 days ago 5

சென்னை,

சென்னையில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தள பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பஸ்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் முதல்கட்டமாக 58 தாழ்தள பஸ்கள் கடந்த ஆகஸ்டு மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக இதுவரை408 தாழ்தள பஸ்கள் சென்னை மாநகரில் 78 வழித்தடங்களில் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article