சென்னை: சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மாநகரில் நேற்று முன்தினம் தொடர்ந்து 131 மி.மீ. அளவிற்கு அதிகமாக மழை பொழிந்ததால், 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கியது. சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உள்ளிட்ட துறைகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணியினை மேற்கொண்டது.
அதன் பயனாக கத்திவாக்கம் நெடுஞ்சாலை, மாணிக்கம் நகர், வியாசர்பாடி, எம்.சி. ரோடு, ஸ்டேன்லி நகர், ரிசர்வ் வங்கி, கெங்குரெட்டி, பெரம்பூர் நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம், ஜோன்ஸ் சாலை, துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், பஜார் ரோடு, மவுண்ட், தில்லை கங்கா நகர், பழவந்தாங்கல், அரங்கநாதன்ஆகிய 20 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
பொதுமக்கள் இயல்பாக இப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகளை பயன்படுத்தப்படும் நிலைகளை ஒரே நாளில் செயல்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், ஆலோசனைகளும் உதவின. கணேசபுர சுரங்கப்பாதையில் தற்போது தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் 20 செ.மீ. மழைபொழிந்தால் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கிய மழைநீர் அகற்றும் சூழ்நிலை இருந்தது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
The post சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது appeared first on Dinakaran.