சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

3 months ago 26

சென்னை,

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், வேப்பேரி, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல புறநகர் பகுதிகளான ஆவடி, கோவர்த்தனகிரி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று காலையில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏப்ரல்- மே மாத அக்னி வெயில் போல வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முன்னதாக இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி ,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்து இருந்தது.

Read Entire Article