சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மழை

3 weeks ago 7

 சென்னை,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்யது உள்ளது.

அண்ணா சாலை, தியாகராயர் நகர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

Read Entire Article