சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்வியை தழுவி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கு முன் 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியுடன் சேப்பாக்கத்தில் ஆடிய சென்னை அணி, ஐந்திலும் வெற்றி பெற்று, சேப்பாக்கம் எங்கள் கோட்டை என மார் தட்டியது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியுடனான தோல்வி, சேப்பாக்கம், சென்னைக்கு பக்கம் அல்ல என காண்பித்துள்ளது. அதுமட்டுமன்றி, 17 ஆண்டுகளாக சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான அத்தனை போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து வந்த சென்னை, நடப்புத் தொடரில் முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளது. மேலும், 15 ஆண்டுகளாக தோல்விகளை தழுவி வந்த டெல்லி அணி, கடந்த 5ம் தேதி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில், 25 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அதிரச் செய்துள்ளது.
The post சென்னைக்கு இனிமேல் பக்கம் அல்ல சேப்பாக்கம் appeared first on Dinakaran.