சென்னை விமானநிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார்

1 month ago 6

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்று மாலை புதிதாக காவேரி மருத்துவமனையின் 4 கிளினிக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் இ.கருணாநிதி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையங்களான டெர்மினல் 1, 4 மற்றும் சர்வதேச முனையமான டெர்மினல் 2, சென்னை விமான நிலைய கார்ககோ பகுதி என மொத்தம் 4 இடங்களில் காவேரி மருத்துவமனை நேற்று முதல் புதிதாக அவசரகால சிகிச்சை மைய கிளினிக்குகளைத் துவக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் பயணிக்க வருபவர்கள், சென்னைக்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளில் யாருக்கேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடியாக காவேரி மருத்துவமனை கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்.

அதேபோல் பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் உள்பட பல்வேறு துறை பணியாளர்கள், விமான சரக்கக ஊழியர்கள் யாருக்கேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கும் இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும். தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நபர்களுக்கு உதவ, இங்கு 2 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் நேற்று மாலை காவேரி மருத்துவமனையின் புதிதாக துவங்கப்பட்ட 4 அவசரகால கிளினிக்குகளின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி 4 கிளினிக்குகளின் செயல்பாடுகளைத் துவக்கி வைத்தார். இதில் காவேரி மருத்துவமனை நிறுவனரும் செயலாக்க தலைவருமான டாக்டர் சந்திரகுமார், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் ஷோபி, புல்லா, மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி அருண்சிங், இ.கருணாநிதி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை விமானநிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article