சென்னை வான் சாகச நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் கண்டு களித்தனர்: விமானப்படை தலைமைத் தளபதி நெகிழ்ச்சி

4 months ago 26

சென்னை,

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு நேரில் வந்து விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள்.

இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளதாக விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சென்னை மெரினாவில் நடந்த வண்ணமயமான சாகசத்தை சுமார் 15 லட்சம் மக்கள் கண்டுகளித்துள்ளது, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. டெல்லி, சண்டிகர், பிரயாக்ராஜ் நகரங்களிலும் வான் கண்காட்சி நடந்திருக்கிறது. எனினும், நிகழ்ச்சியின் அளவிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும் சென்னைதான் மிகப்பெரியது. என தெரிவித்தார்.

Read Entire Article