சென்னை வானிலை மையம் அறிவிப்பு; வரும் 13ம் தேதி தொடங்குகிறது தென் மேற்கு பருவமழை

3 hours ago 1

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், மேற்கு திசை காற்று (அரபிக் கடல் பகுதி) இந்திய பெருங்கடல் பகுதி, கிழக்கு காற்று (வங்கக் கடல் பகுதி) ஆகியவற்றின் இணைவு ஏற்பட்டுள்ளதால் பல் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி புதுச்சேரி, நெய்வேலி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, திண்டுக்கல், ராஜபாளையம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, வால்பாறை, போடி நாயக்கனூர் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது.

சென்னை, கோவை, கரூர், நாகப்பட்டினம், சேலம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது. கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இயல்பைவிடவும் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை குறைந்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலை ெகாண்டுள்ளது.

இதனால் இன்று தொடங்கி 12ம் தேதி ரை தமிழகத்தில் பல இடங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்துடன் கூடிய சூறாவளிக்காற்றுடன் மழை பெய்யும். இதற்கிடையே, அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 13ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும். வழக்கமாக மே இறுதியில்தான் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். இந்தாண்டு 10 நாள் முன்னதாகவே பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பநிலையை பொறுத்தவரையில் இன்று தொடங்கி 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை இன்று 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

The post சென்னை வானிலை மையம் அறிவிப்பு; வரும் 13ம் தேதி தொடங்குகிறது தென் மேற்கு பருவமழை appeared first on Dinakaran.

Read Entire Article