
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள சாலையில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, இதையடுத்து போலீசார் நேற்று இரவு அப்பகுதிக்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதை பார்த்த இளைஞர்கள் தப்பிச்செல்வதற்காக அங்கிருந்த மதில்சுவர் மீது ஏறி குதித்துள்ளனர்.
அப்போது, இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, இரு இளைஞர்களையும் கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வழிப்பறி சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.