சென்னை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொல்லப்பட்ட வழக்கு; 27-ந்தேதி தீர்ப்பு

3 weeks ago 4

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, கல்லூரிக்கு செல்வதற்காக சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற மாணவியை ரெயில் முன்பு தள்ளி சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்தார். மகள் இறந்த துக்கத்தில் சத்யபிரியாவின் தந்தையும் மரணம் அடைந்தார். ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக தகவல் வெளியானது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் ஜனவரி 27-ந்தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article