புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ேசது எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. இன்ஜின் டிரைவர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ராமேஸ்வரம்-சென்னை இடையே சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 23 பெட்டிகளை கொண்டது. ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு 8.51 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக ரயில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதில் 600க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 12.20 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர்-நார்த்தாமலை இடையே வந்தபோது ரயில் இன்ஜினில் உள்ள டர்பு வால்வு டீப் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து இன்ஜின் முழுவதும் புகை கிளம்பியது.
உடனடியாக இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தியதுடன் துரிதமாக செயல்பட்டு தீயணைப்பானை வைத்து தீயை அணைத்தார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த ரயில் அதே பகுதியில் ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் நின்றது. பின்னர் காரைக்குடியிலிருந்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு அந்த இன்ஜின் மூலம் 2.02 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் ஒன்ேற முக்கால் மணி நேரம் ரயிலிலேயே பயணிகள் தவித்தனர். சமீபத்தில் திருச்சி ரயில் நிலையத்தை கடந்த சில நிமிடங்களில் திடீரென்று சேது ரயிலின் 3 பெட்டிகள் தானாகவே தனியே கழன்றது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை ரயில் இன்ஜினில் திடீர் தீ: புதுகை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.