சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

6 hours ago 1

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர்வைசர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் : சூப்பர்வைசர் (ஆபரேஷன்ஸ் & மெயிண்டன்ஸ்)

கல்வி தகுதி : தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ, ஐடி, எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18-வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் : மாதம் ரூ.26,600- வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை : மெரிட் லிஸ்ட் மற்றும் ரிஷர்வேஷன் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

தேர்வு அறிவிப்பை படிக்க : https://backend.delhimetrorail.com/documents/8865/Advt-Chennai-Metro-Walk-in-Screening-ENGLISH.pdf

Read Entire Article