சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோயில் 1ம் தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி (55). இவர் அருணகிரி சங்கரன்கோவில் என்ற முகநூல் சமூக வலைதள முகவரியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும், இந்து சமுதாய பண்பாட்டினை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக தகவல் பதிவிட்டு வந்துள்ளார். இதுகுறித்த ராஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்த அருணகிரியை கைது செய்தனர். கைதான அருணகிரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் என்பதும், அருணகிரியின் தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post சமூக வலைதளத்தில் அவதூறு வைகோ மாஜி உதவியாளர் கைது appeared first on Dinakaran.