சென்னை: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

3 months ago 11

சென்னை,

சென்னையில் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் போக்குவரத்து இருந்து வருகிறது இந்த ரெயில் போக்குவரத்தை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி மற்றும் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

"சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி உட்பட 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

As part of ongoing engineering works, Line Block/Signal Block is permitted in #Chennai Central – #Gudur section between #Ponneri & #Kavaraipettai Railway Stations on 16th, 19th & 21st February 2025.Passengers, kindly take note.#RailwayAlert pic.twitter.com/KophnbfYlj

— DRM Chennai (@DrmChennai) February 14, 2025

 

Read Entire Article