
சென்னை,
மாநில போட்டிகளுக்கான சென்னை மாவட்ட சப்-ஜூனியர் (14 வயதுக்கு உட்பட்டோர்) வாள்வீச்சு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி மற்றும் சென்னை மாவட்ட ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) வாள்வீச்சு ஆண்கள், பெண்கள் அணி தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி, மாநில போட்டிகளுக்கான சென்னை மாவட்ட சப்-ஜூனியர் (14 வயதுக்கு உட்பட்டோர்) வாள்வீச்சு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு நாளையும் (சனிக்கிழமை), சென்னை மாவட்ட ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) வாள்வீச்சு ஆண்கள், பெண்கள் அணி தேர்வு நாளை மறுநாளும் சென்னை முகலிவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள ரவீந்திர பாரதி குளோபல் பள்ளி வளாகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த தகவலை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்க செயலாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.