சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

2 months ago 15

சென்னை,

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (1.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி திருவல்லிக்கேணி, கொளத்தூர், பெரம்பூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அசோக் நகர், வடபழனி, மேற்கு மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சென்டிரல், பெரியமேடு, தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

Read Entire Article