சென்னை மாநகராட்சியின் இன்றை மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றம்

3 months ago 14
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு கோசாலைகள் அமைப்பதற்கு நிர்வாக ரீதியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானங்கள் மற்றும் 595 பூங்காக்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்குதல் உள்பட 79 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம், தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கம் போன்றவற்றை தனியாருக்கு குத்தகை விடுதல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கால்பந்து விளையாட்டு மைதானங்களை தனியார் வசம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, சிபிஎம் கவுன்சிலர்கள் ரிப்பன் மாளிகையில் கால்பந்து விளையாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
Read Entire Article