சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலினை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்து துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி மற்றும் உதவி பொறியாளர் கலைச் செல்வி ஆகியோரின் புகாரின்பேரில் விசாரணை நடத்தி வந்த கோயம்பேடு போலீசார் திமுக கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட 3 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவுன்சிலர் ஸ்டாலினை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144வது வட்டச் செயலாளரும்-சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்.
The post சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.