
சென்னை,
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சபரிநாதன் நபர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று தனது கடையில் வியாபாரம் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாமக தென் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சத்யராஜ் உள்பட பாமக நிர்வாகிகள், மளிகை கடைக்கார் சபரிநாதனை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த சபரிநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இளைஞர் அணி தலைவர் சத்யராஜ் உள்பட பாமக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில்லறை கேட்டத்தால் கடைக்காரரை பாமக நிர்வாகிகள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, மளிகை கடைக்காரரை பாமக நிர்வாகிகள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.