சென்னை பெருமழை: 2 நாட்களில் 15.68 லட்சம் பேருக்கு உணவு விநியோகம் - தமிழக அரசு தகவல்

4 weeks ago 7

சென்னை: "தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி பெருமழை காரணமாக அக்டோபர் 16, 17 ஆகிய இரண்டு நாள்களிலும் நிவாரண முகாம்களில் 14.60 லட்சம் பேருக்கும், அம்மா உணவகங்கள் மூலம் 1.28 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டது. 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் மூலம் 17,471 பேர் பயன் பெற்றனர்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய ரெட் அலர்ட் மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று அக்.16 அன்று காலை மற்றும் மாலையில் பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன. காலையில் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்று பயனடைந்தனர். அதேபோல, மாலையில் 29,316 பேருக்கு உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.

Read Entire Article