சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி போக்குவரத்து மாற்றம்!

2 months ago 8

சென்னை: சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புரசைவாக்கம் பகுதியில் நண்பகல் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு முடியும் வரை கங்காதீஸ்வர் கோயில் தெருவில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்ததாவது; கங்காதீஸ்வரர் கோவில் தெருவில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 05.00 மணி முதல் நடைபெறவுள்ளதால், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காகவும், வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும், இன்று (28.11.2024) காலை 05.00 மணி முதல் 12.00 மணி வரையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து கங்காதீஸ்வரர் கோவில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் நேராக டவ்டன் பாலம் (அல்லது) சர்வீஸ் சாலை, டவ்டன் சந்திப்பு ரிதர்டன் சாலை வழியாக ஈவிஆர் பெரியார் சாலையை அடையலாம். டவ்டன் சந்திப்பிலிருந்து கங்காதீஸ்வரர் கோவில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் ஈவிஆர் பெரியார் சாலையை அடைய ரிதர்டன் சாலையில் திருப்பி விடப்படும். ஜெர்மியா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் டவ்டன் பாலத்தில் அனுமதிக்கப்படாது.

அந்த வாகனங்கள் சர்வீஸ் ரோடு மற்றும் டவ்டன் சந்திப்பு வழியாக ரிதர்டன் சாலைக்கு செல்லலாம். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்து கங்காதீஸ்வரர் கோவில் தெருவை நோக்கி வரும் வாகனங்கள் இடதுபுறம் நாராயணகுரு சாலைக்கு சென்று ஹன்டர்ஸ் சாலை, ஈவிகே சம்பத் சாலை, ஈவிஆர் பெரியார் சாலைக்கு திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

 

The post சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி போக்குவரத்து மாற்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article