சென்னை புத்தகக் காட்சியில் இன்று 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

8 hours ago 3

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது வழங்க உள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடக்கிறது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில் தினகரன்- சூரியன் பதிப்பகத்திற்கு இரண்டு அரங்குகள் (எண்கள் 329, 330) ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று புத்தகக் காட்சியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்க உள்ளார். உரைநடைக்கு பேராசிரியர் அருணன், கவிதைக்கு நெல்லை ஜெயந்தா, நாவலுக்கு சுரேஷ் குமார இந்திரஜித், சிறு கதைகளுக்கு என். ஸ்ரீராம், நாடகத்திற்கு கலைராணி, மொழிபெயர்ப்புக்கு நிர்மால்யா ஆகிய 6 பேர் இந்த விருதுகளை பெற இருக்கிறார்கள். மேலும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றுகிறார்.

The post சென்னை புத்தகக் காட்சியில் இன்று 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார் appeared first on Dinakaran.

Read Entire Article