சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் 14-வது மாடியிலிருந்து தவறி விழுந்த ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

4 months ago 26

சென்னை: சென்னை புதுப்பேட்டை காவலர்குடியிருப்பில் 14-வதுமாடியிலிருந்து தவறி விழுந்துஆயுதப்படை காவலர் உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (29). இவர், சென்னைபுதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வந்தார்.

செல்வமுருகன் பராமரிப்புப் பணிக்காக புதுப்பேட்டை காவலர்குடியிருப்பில் உள்ள தண்ணீர்தொட்டியில் தண்ணீர் நிறைந்துள்ளதா? என பார்ப்பதற்காக நேற்று மதியம் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று பார்த்தபோது அவர் கால் தவறி 14-வதுமாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

Read Entire Article