சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுக்கும்போது கடலில் விழுந்த கார்: டிரைவரை தேடும் பணி தீவிரம்

4 weeks ago 5

சென்னை,

சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார்.

துறைமுகத்தில் வீரர்களை ஏற்றிக்கொண்டு ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலில் விழுந்தது. இதையடுத்தும் காரில் இருந்த கடற்படை வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஆனால், கார் டிரைவர் முகமது சகி கடலில் விழுந்து மாயமானார். அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, காயமடைந்த கடற்படை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article