சென்னை: சென்னை தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படுவதால் தொழில்முனைவோர்களின் வாழ்வாதாரம் மேம்படும். ரூ.25 கோடியில் பாரதி மகளிர் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். சென்னையில் ரூ.40 கோடி செலவில் 15 முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும். வடசென்னையில் ரூ.8 கோடியில் 4 இடங்களில் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும். 6 அமுதம் அங்காடிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
The post சென்னை தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.