சென்னை: சென்னை - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் மணிக்கு 130 வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில், வளைவு நீக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது, தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது, வளைவுகளை நீக்குவது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.