சென்னை: தபால் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

3 hours ago 1

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மும்மொழிக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தெரிவித்து திமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதேபோல, அதிமுக, விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனையடுத்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவை சேர்ந்தவர்கள் கருப்புமை வைத்து அழித்தனர்.

Read Entire Article