சென்னை: ஜெயின் கோவிலில் அரை கிலோ தங்கம் திருட்டு

1 week ago 5

சென்னை,

சென்னை சவுக்கார்பேட்டை மிண்ட் தெருவில் ஜெயின் கோவில் அமைந்திருந்தது. அங்கு கோவில் நிரவாகி இன்று காலை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

கோவிலில் வைக்கப்பட்டிருந்த அரை கிலோ தங்கம் , வெள்ளி உள்பட கோவிலின் உண்டியலில் இருந்த பணமும் திருடப்பட்டிருந்தது, இது குறித்து உடனடியாக கோவில் நிர்வாகி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த போலீசார் ஜெயின் கோவிலுக்கு விரைந்து சென்று சிசிடிவி காட்சிகள் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்,

மேலும் இந்த விவகாரத்தில் கோவிலில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த 6 பேர் மீது சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article