சென்னை சென்டிரல் - கும்மிடிப்பூண்டி உள்பட 18 மின்சார ரெயில் சேவைகள் ரத்து

2 months ago 9

சென்னை,

சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே நாளை (திங்கட்கிழமை) காலை 9.50 மணி முதல் மாலை 3.50 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சென்டிரலில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 9.55, 11.25, மதியம் 12, 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

* சென்டிரலில் இருந்து நாளை காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து நாளை காலை 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

* கும்மிடிப்பூண்டியிலிருந்து நாளை மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




 

As part of ongoing engineering works, Line Block/Signal Block is permitted in #Chennai Central – #Gudur section between #Kavaraipettai & #Ponneri Railway Stations on 24th February 2025.

Passengers, kindly take note#RailwayAlert pic.twitter.com/mEqbaCNZsO

— DRM Chennai (@DrmChennai) February 22, 2025



Read Entire Article