'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது

3 months ago 25

சென்னை,

சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் வைபவ். பின்னர், 'கப்பல், மேயாத மான்' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள 'தி கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து நடிகர் வைபவ், 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இது நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படக்குழு படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் நிறைந்த ஒரு கொள்ளை கூட்டத்துடன் ஒரு வங்கியை கொள்ள திட்டமிடுகின்றனர். இது தொடர்பான காட்சிகள் டிரெய்லரில் வெளியாகியுள்ளது.

திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

The official trailer for #ChennaiCityGangsters is here! Watch as all your favourite stars and comedians come together for a non-stop laughter riot.Link - https://t.co/y5Mg7I7VVK@BTGUniversal @bbobby @ManojBeno @actor_vaibhav @AthulyaOfficial @Mani_Rajeshh @immancomposer

— BTG Universal (@BTGUniversal) October 7, 2024
Read Entire Article