ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் பாதுகாப்புக்காக ‘சென்னை சிங்கம் ஐபிஎல்’ என்ற கியூ ஆர் குறியீட்டை போலீஸார் அறிமுகம் செய்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 23, 28ம் தேதி, ஏப்.4, 11, 25, 30, 12 ஆகிய நாட்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்கு வருவார்கள். இந்நிலையில், போட்டியை காண வரும் ரசிகர்கள், சிரமமின்றி செல்வதற்கும், போட்டியை காண்பதற்கும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், சென்னை காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.