சென்னை கே.கே.நகரில் திருட்டு புகாரை விசாரிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

4 months ago 29
40 சவரன் தங்க நகைகள் காணாமல் போன வழக்கை விசாரிக்க ஜி-பே மூலம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை கே.கே. நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சங்கர் என்ற ஐ.டி. நிறுவன உரிமையாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். அதில், நகை காணமல் போனது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலத்தில் தாம் அளித்த புகார் விசாரணைக்காக கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள சங்கர், விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் நகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னதாக கூறியுள்ளார். ஜி-பே மூலம் பணம் அனுப்பிய பிறகும் ராஜேந்திரன் விசாரிக்காமல் அலைகழித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆதாரத்துடன் புகார் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Read Entire Article