சென்னை: சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் அமைச்சர் சிவசங்கர் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியான நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் தொ.மு.ச., சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கத்தினர் நேற்று பங்கேற்றனர். 15-வது ஊதிய ஒப்பந்த அடிப்படையில் 15% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களுடன் 2வது நாளாக பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.