சென்னை குடியிருப்புச் சந்தை 2024ஆம் ஆண்டில் 16% இரட்டை இலக்க விலை வளர்ச்சியை அடைந்துள்ளது: PropTiger.com அறிக்கை

2 hours ago 1

சென்னை: அதிகரித்து வரும் தொழிலாளர் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைகள் காரணமாக, சென்னை உட்பட இந்தியாவின் பிற முக்கியக் குடியிருப்புச் சந்தைகளில் சொத்து விலைகள் உயர்ந்துள்ளன. PropTiger.com-இன் சமீபத்திய அறிக்கையின்படி, டெல்லி என்சிஆர் மிகப்பெரிய அதிகரிப்பைச் சந்தித்தது, விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 49% அதிகரித்துள்ளன. அதிகரித்து வரும் கட்டுமானச் செலவுகள் மற்றும் பிரீமியம் வீடுகளுக்கான தொடர்ச்சியான தேவை காரணமாக, சென்னை போன்ற பிற நகரங்களும் இதைப் பின்பற்றியுள்ளன.

“ரியல் இன்சைட்: ரெசிடென்ஷியல் ஆனுவல் ரவுண்ட்-அப் 2024” என்ற தலைப்பிலான PropTiger.com அறிக்கையின்படி, 2024 அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் நகரங்களில் சொத்து விலைகள் மாறுபட்ட அளவுகளில் அதிகரித்தன. கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டு கால பெரிய உயர்வுக்குப் பிறகு ஐதராபாத்தின் தெற்கு வீட்டுச் சந்தையில் விலை வளர்ச்சியில் மந்தநிலை காணப்பட்டது, அதே நேரத்தில் இப்பகுப்பாய்வில் உள்ள மற்ற ஒவ்வொரு நகரமும் இரட்டை இலக்க ஆண்டு மதிப்பைப் பெற்றன.

விலைப் போக்குகள்
நகரம் கியூ4 23 கியூ4 24 ஒய்ஓஒய்
அகமதாபாத் 4,000 4,402 10%
பெங்களூரு 6,744 7,536 12%
சென்னை 6,200 7,173 16%
டெல்லி என்சிஆர் 5,445 8,105 49%
ஐதராபாத் 6,842 7,053 3%
கொல்கத்தா 5,100 5,633 10%
எம்எம்ஆர் 10,712 12,600 18%
புனே 6,140 7,108 16%
ஆதாரம்: ரியல் இன்சைட் ரெசிடென்ஷியல் – ஆனுவல் ரவுண்ட்-அப் 2024, வீட்டுவசதி ஆராய்ச்சி

இப்பகுப்பாய்வில் அடங்கிய நகரங்கள் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி-என்சிஆர் (குருகிராம், நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத் & ஃபரிதாபாத்), மும்பை பெருநகரப் பகுதி (மும்பை, நவி மும்பை & தானே), புனே.

“அதிக நிகர மதிப்பு டெவலப்பர்கள் மலிவான வீடுகளை விட பிரீமியம் சலுகைகளுக்கு முன்னுரிமை அளிப்பதால், சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்களின் தாயகமான டெல்லி-என்சிஆர்-இல் முதலீடு செய்பவர்கள், இந்த விரும்பிய குடியிருப்பு சந்தைக்கான மேல்நோக்கிய வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பான்-இந்திய விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 26% சரிவு இருந்தபோதிலும், குருகிராம் (ஆண்டுக்கு ஆண்டு 144% அதிகரிப்பு), கிரேட்டர் நொய்டா (ஆண்டுக்கு ஆண்டு 54% அதிகரிப்பு), நொய்டா (ஆண்டுக்கு ஆண்டு 3% அதிகரிப்பு) போன்ற முக்கியப் பங்களிப்பாளர்களில் வீட்டு விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு இலாபம் ஏற்படுவதற்கு இதுவே முக்கியக் காரணம்,” என்று இந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையில் சொத்து விலைகள் சராசரியாக ஆண்டுக்கு ஆண்டு 18% உயர்ந்துள்ளன, ஏனெனில் இதே போன்ற காரணிகள் இதற்குக் காரணம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வணிகத் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் ஆகியோர் வசிக்கும் மும்பை, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் மிகவும் விலையுயர்ந்த வீட்டுச் சந்தையாகும் என்று அது மேலும் கூறியது.

”இந்த வகையான விலை உயர்வு சந்தேகத்திற்கு இடமின்றி அடிப்படை தேவை, நம்பிக்கைக்குரிய வளர்ச்சி மற்றும் சாதகமான வாங்குபவர் அணுகுமுறையின் அறிகுறியாகும். இருப்பினும், மக்களில் கணிசமான பகுதியினர் வீடு வாங்குவதற்கு அரசாங்க மானியங்களைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், செலவு அழுத்தம் மலிவு விலை சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் மலிவு விலை வீடுகளை ஆதரிப்பதற்காக இந்த முக்கியமானப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் கொள்கைகளை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும். வரவிருக்கும் பட்ஜெட்டில் வரிவிதிப்புச் சட்டங்களில் நேர்மறையான மாற்றங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் விகிதக் குறைப்புக்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக மலிவு விலையை உறுதி செய்வதில் நீண்ட தூரம் செல்லக்கூடும்” என்று Housing.com & Proptiger.com -இன் குழு சிஇஓ, திரு. துருவ் அகர்வாலா அவர்கள் கூறினார்.

குறிப்பு: இந்த அறிக்கையில் அடங்கிய வீட்டுவசதிச் சந்தைகளில் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி-என்சிஆர் (குருகிராம், நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத், ஃபரிதாபாத்), எம்எம்ஆர் (மும்பை, நவி மும்பை & தானே), புனே ஆகியவை அடங்கும்.

The post சென்னை குடியிருப்புச் சந்தை 2024ஆம் ஆண்டில் 16% இரட்டை இலக்க விலை வளர்ச்சியை அடைந்துள்ளது: PropTiger.com அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article