சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை

3 hours ago 3

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்னிந்தியாவிலேயே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்தான் தீக்காயத்துக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் இன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணியின்போது மின் வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் தடையை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Read Entire Article