
சென்னை,
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.