சென்னை காக்கா தோப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; கால அவகாசம் கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

5 hours ago 3

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள காக்கா தோப்பு பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களை காலி செய்ய அறிவுறுத்திய அதிகாரிகள், இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, வீடுகளை காலி செய்வதற்கு கால அவகாசம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், வீடுகளை இடிக்க விடாமல் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீடுகளை காலி செய்ய குறைந்தபட்சமாக இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வாடைக்கு வீடு கிடைக்க சிரமமாக உள்ளதாகவும், குறைந்தபட்சம் 10 ஆயிரத்துக்கு மேல் வாடகை கேட்பதால், பொருளாதார ரீதியாக குறைந்த வருமானத்தை கொண்டுள்ள தங்களால் உடனடியாக புதிய வீடு பார்த்து செல்ல முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

இதனிடையே அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது கழிவறை இடிக்கப்பட்டது. தங்கள் வீடு இடிக்கப்படுவதைக் கண்டு தேம்பி அழுத சிறுமி ஒருவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்ட நிலையில், முதல் உதவிக்காக அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read Entire Article