சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

2 hours ago 3

சென்னை: கதீட்ரல் சாலையில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று,
குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்களுடன் கூடிய
கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவைப் போற்றுவதற்காக அவர்தம் பெயரில் சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article