சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை புறநகர் ஏசி மின்சார ரயில் சோதனை ஓட்டம்: அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல்

2 months ago 5

செங்கல்பட்டு: சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. புறநகர் மின்சார ரயில்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் ஏசி வசதி கொண்ட ரயில்கள் இயக்கினால் எந்த களைப்பும் இல்லாமல், எளிதாக பயணிக்க முடியும் என்ற கோரிக்கை பயணிகளிடம் இருந்து வந்தது. ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

மேலும், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் அமைக்கப்படும் என என சட்டசபையில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வலியுறுத்தலின்படி, ஏசி கோச்சுகள் கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்றது. இதற்கான பணி முடிவடைந்து சோதனை ஓட்டம், வில்லிவாக்கம், அம்பத்தூர், அரக்கோணம் ஆகிய வழித்தடத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு விரையில் ஏசி ரயில் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில்கள், சென்னை – செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் ஆவடி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாகவும், வேளச்சேரி கடற்கரை ரூட்டில் மட்டும் ஏசி ரயில்கள் இயக்கப்படாது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கும் வசதி உள்ளது.

புறநகர் ஏசி ரயில்களில் 10 கிமீ வரை ரூ.29 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 11-15 கிமீ தொலைவுக்கு ரூ.37 கட்டணமாகவும், 16-25 கி.மீ தொலைவுக்கு ரூ.65 கட்டணமாக நிர்ணயிக்கப்படும். சென்னை கோட்டத்திற்கும் ஒரு ரயில் ஒதுக்கப்பட்டு இருந்தது.தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சோதனை ஓட்டமானது நடைபெற்றுள்ள நிலையில் ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

வெள்ளை நீல வண்ணத்தில் பார்ப்பதற்கு வந்தே பாரத் ரயில்கள் போலவே இந்த ஏசி ரயில் பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இருக்கை மற்றும் ஸ்டாண்டிங் வசதியுடன் இந்த ரயிலை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முழுமையாக ஏசி வசதி கொண்ட இந்த ரயில்கள் தற்போது பரிசோதனை முயற்சியாக இயக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என்பதால் மிகவும் ஆவலுடன் ஏசி ரயிலில் பயணிக்க பயணிகள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

The post சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை புறநகர் ஏசி மின்சார ரயில் சோதனை ஓட்டம்: அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article