சென்னை ஓபன் செஸ் இனியன் சாம்பியன்

4 months ago 14

சென்னை: சென்னை, எழும்பூரில் 15வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேசம், பெலாரஸ், கொலம்பியா, பிரான்ஸ், சிங்கப்பூர், மங்கோலியா, இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த 176 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த 137பேர் போட்டியிட்டனர். மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் 8.5புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். அவர் 10 சுற்றுகளில் 7 வெற்றிகள் பெற்றார். 3ல் டிரா செய்தார். அவர் வென்ற வீரர்களில், 2 கிராண்ட் மாஸ்டர், 2 சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் அடங்குவர்.

முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற இனியனை பாராட்டி மகாலிங்கம் கோப்பையும், ரூ. 4லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரரான கிராண்ட் மாஸ்டர் எம்.ஆர்.வெங்கடேஷ் 8 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். அவருக்கு ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 7.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த சர்வதேச மாஸ்டர் அரோன்யாக் கோசுக்கு ரூ. 1.8 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. ஐசிஎப் அலுவலர் தீபன் சக்கரவர்த்தி 7.5புள்ளிகளுடன் 4வது இடத்தை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களில் 9 பேர் இந்தியர்கள்.

The post சென்னை ஓபன் செஸ் இனியன் சாம்பியன் appeared first on Dinakaran.

Read Entire Article