சென்னை: ஓடும் பேருந்தில் தகராறு.. நடத்துநர் கீழே விழுந்து உயிரிழப்பு

2 months ago 15

சென்னை,

சென்னை மாநகர பேருந்தில் ஜெகன் என்பவர் நடத்துநராக பணிபுரிந்து வந்தார். இவர் இன்று எம்.கே.பி நகர் முதல் கோயம்பேடு செல்லும் 46G பேருந்தில் நடத்துநர் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேருந்தில் ஒருவர் மதுபோதையில் ஏறியுள்ளார். அந்த நபருக்கும், நடத்துநருக்கும் இடையே டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு இருவருக்கும் கைகலப்பாக மாறியது. அப்போது எதிர்பாராதவிதமாக நடத்துநர் ஜெகன் ஓடும் பேருந்தில் இருந்து திடீரென கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் நடத்துநர் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த அமைந்தகரை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து நடத்துனர் ஜெகன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவத்துக்கு காரணமான பயணியை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நடத்துநருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article