சென்னை ஐஐடியில் இணைய பாதுகாப்பு மையம் தொடக்கம்

1 month ago 9

சென்னை: நாட்டில் புதுமைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த சென்னை ஐஐடியானது புதிய இணையப் பாதுகாப்பு மையத்தைத் (சைஸ்டார்) தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, மைய ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியை ஸ்வேதா அகர்வால், பேராசிரியர் செஸ்டர் ரெபைரோ, ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆசிரியர் ஜான் அகஸ்டின், புகழ்பெற்ற கல்வியாளர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த பாதுகாப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி பேசுகையில், “இணைய அச்சுறுத்தல்கள் பண ஆதாயத்திற்காக மட்டுமின்றி, முக்கிய உள்கட்டமைப்புகளும் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு ஆளாகின்றன. தேசத்தின் பாதுகாப்பிற்காக இணையப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கான செயலில் இறங்குவது மிகவும் முக்கியம். இதனால் பாதுகாப்பான டிஜிட்டல் உலகத்திற்கு பங்களிப்பை வழங்க முடியும். அத்துடன் நிதி, சுகாதாரம், மின்னணுத் தொழில்நுட்பம் போன்ற தொழில்களில் முக்கியமான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவாக கவனம் செலுத்தப்படும்”என்றார்.

 

The post சென்னை ஐஐடியில் இணைய பாதுகாப்பு மையம் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article