
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் 10 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும், 34 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.