சென்னை,
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் - அத்திப்பட்டு இடையே உயர் மின்னழுத்த கேபிளில் ஏற்பட்ட பழுதால், அவ்வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணூர், திருவொற்றியூர் ரெயில் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்கும் மேலாக எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் ரெயில்கள் இயங்குகின்றன.
உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.