சென்னை ஊர்க்காவல் படையில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

2 months ago 10

சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் இருக்கலாம். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி, போக்குவரத்து பணிக்கு ரூ.560 சிறப்பு படி வழங்கப்படும். விண்ணப்பங்களை நாளை முதல் ஊர்க்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சென்னை-15 என்ற முகவரில் இலவசமாக பெற்று வரும் டிசம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்குகள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

The post சென்னை ஊர்க்காவல் படையில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article